இந்தியாவில் ஆம்னெஸ்டி அமைப்புக்கு தடை: அசாம் முதல்வர் கோரிக்கை

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கவுகாத்தி: '' இந்தியாவில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்'' என அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக கட்டமைப்பு மற்றும் தலைமைக்கு எதிராக ஆம்னெஸ்டி அமைப்பு நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நமது நாட்டிற்கு அவப்பெயர்
இந்தியா, ஆம்னெஸ்டி அமைப்பு, தடை, அசாம் முதல்வர், ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா

கவுகாத்தி: '' இந்தியாவில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்'' என அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக கட்டமைப்பு மற்றும் தலைமைக்கு எதிராக ஆம்னெஸ்டி அமைப்பு நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நமது நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், இடையூறு செய்யவும் முயலும் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும்.


latest tamil news



இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவதூறு ஏற்படுத்த இடது சாரி பயங்கரவாதத்தை ஆம்னெஸ்டி அமைப்பு ஆதரித்து வருவது நமக்கு தெரியும். இது சர்வதேச சதிச்செயல். இந்தியா சமூகங்களுக்கு இடையே பிரிவு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இவ்வாறு ஹிமாண்டா பிஸ்வாஸ் சர்மா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202105:53:14 IST Report Abuse
ராஜா கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். ரபேல் ஒப்பந்தத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்று தான் இவ்வளவு அபாண்ணடங்களையும் இந்திய அரசின் மீது சுமத்துகிறார்கள். அந்த நிறுவனம் மதமாற்றத்துக்கு நிதியளிக்கும் நிறுவனமாகும். அதனால் தான் இங்கு காங்கிரஸ் மற்றும் அவர்களின் ஆதரவு மதமாற்றும் கும்பலுக்கு பற்றி எரிகிறது. காங்கிரஸ் இருந்திருந்தால் ரபேலில் வெறும் ரா கூட வந்திருக்காது. அவர்கள் தங்கள் நோக்கத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பிஜேபி ஒட்டுக்கேட்கிறது என்றால், மகாராஷ்டிராவில் அஜித் பவார் நாடகத்தில் அவர்கள் எப்படி ஏமாந்தார்கள்?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
21-ஜூலை-202120:07:10 IST Report Abuse
தமிழ்வேள் ஆம்னெஸ்டி இன்டெர்னஷனல் ஒரு ஆபிரகாமிய அமைப்பு ....கிறிஸ்தவ இஸ்லாமிய கொடுமைகளை பற்றியோ வன்புணர்வுகள் பற்றியோ விசாரிக்க அல்லது கண்டனம் தெரிவிக்க கூட வக்கற்ற ஒரு அடிமை அமைப்பு .....வத்திக்கானில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் , குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பற்றி விசாரிக்க இதற்கு துணிவு உண்டா ? அல்லது விசாரித்து விட்டு அந்த அமைப்பே இயங்க இயலுமா ? உருப்படாத ஒரு குடிகார , காமாந்தகார கூட்டம் இந்த அம்னெஸ்டி அமைப்பு
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
21-ஜூலை-202116:56:04 IST Report Abuse
ram அப்படியே இங்கு இருக்கும் எல்லா என்ஜிஓக்கலையும் தடை செய்யணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X