தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜ. உளவு பார்க்கும்: குமாரசாமி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு: ‛‛அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜ., உளவு பார்க்கும். பா.ஜ.வின் இத்தகைய மோசமான நிலையை கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது. இது, ‛மனித
Former Karnataka, FormerCM, Kumaraswamy, BJP, Can Stoop, Any Level, Gain Power, கர்நாடகா, முன்னாள் முதல்வர், குமாரசாமி, பாஜக, உளவு

பெங்களூரு: ‛‛அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜ., உளவு பார்க்கும். பா.ஜ.வின் இத்தகைய மோசமான நிலையை கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது. இது, ‛மனித உரிமை மீறல்' என்ற போதிலும், மத்திய அரசு சமீபகாலமாக உளவு பார்க்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது மற்றும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., பயன்படுத்திய ஆயுதங்களில் இந்த உளவு விவகாரமும் ஒன்று. என்னை உளவு பார்த்த மத்திய அரசு, இறுதியில் என் மீதே தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகாரை கூறியது.


latest tamil news


அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் அக்கட்சி மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜ., எந்த நிலைக்கும் செல்கிறது. இது அபாயகரமானதாகும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட விஷயங்களை உளவு பார்த்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜ., உளவு பார்க்கும். அந்த நாள் வெகுதூரம் இல்லை. பா.ஜ.,வின் இத்தகைய மோசமான நிலையை கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202105:45:05 IST Report Abuse
ராஜா இதுவும் யூகம் தான். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொள்வதைப்போல், சொந்த நாட்டின் மீதே சுயநலத்துக்காக கரியள்ளி பூசுகிறார்கள்.
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202120:07:14 IST Report Abuse
Jai அது சரி, அவருடைய கவலை அவருக்கு. குட்டி ராதிகா விசயம் ஒட்டு கேட்டு வரவில்லை. குட்டி ராதிகா அவரே முன்வந்து சொன்னதுதான்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
21-ஜூலை-202117:05:04 IST Report Abuse
ram வொர்த்தே இல்லை இவரை உளவு பார்த்து இது தெரிந்தால் அந்த சாப்ட்வேர் உருவாக்கினவன் தற்கொலை செய்து கொள்வான்.
Rate this:
21-ஜூலை-202119:25:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்தங்கள் பதிவுக்கு ஆதரவு 1 : 9 - எனக்கு இந்த SPYWARE பற்றியெல்லாம் தெரியாது - அரசு உளவு பார்க்கவில்லை என்று அறிவித்து விட்டது - அப்படியென்றால் யார் என்ற கேள்வி எழுகிறது - அடுத்த கேள்வி அரசின் உளவுத்துறை மீது எழுகிறது - மூன்று ஆண்டுகளாக இது நடந்து கொண்டிருக்கிற பட்சத்தில்.......... இதுவரை அரசு என்ன செய்திருக்கிறது/ என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது - பத்மபாலா உங்களுக்கு தான் எனது கேள்வி தேச பாதுகாப்பு பற்றி யாருக்கு பொறுப்பு இல்லை - விவாதிக்க பட அனுமதிக்கப்படாவிட்டால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X