மத்திய இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்., திட்டவட்டம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், 'கோவிட் 2வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது' எனத் தெரிவித்தார்.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், எம்.பி.,யுமான

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், 'கோவிட் 2வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது' எனத் தெரிவித்தார்.



latest tamil news




இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், எம்.பி.,யுமான கே.சி.வேணுகோபால் இன்று தெரிவித்து உள்ளதாவது: ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் எத்தனை நோயாளிகள் உயிரிழந்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம், கேள்விப்பட்டோம். ஆனால், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தவறான தகவலை அளித்து அவையைத் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். ஆதலால், அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வருவோம்.


latest tamil news




அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202105:42:49 IST Report Abuse
ராஜா தான் சொன்ன பொய்யை காப்பாற்ற காங்கிரஸ் படாத பாடு படுகிறது. டிஜிட்டல் இந்தியா வேண்டாம் என்றால் வேறு எங்காவது நல்ல பாலைவணமா பார்த்து குடியேறிக்கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த்!
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-ஜூலை-202116:48:31 IST Report Abuse
J.Isaac டிஜிட்டல் இந்தியாவில் நிறைய அட்மின், தட்டச்சு தவறுகள் நடக்கின்றன.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
21-ஜூலை-202112:46:48 IST Report Abuse
Narayanan Muthu பொய் பித்தலாட்டம் ஏமாற்றுதல் மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சியிடம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X