விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க மறுப்பதாக புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க மறுப்பதாக புகார்

Added : ஜூலை 21, 2021
Share
ஈரோடு: கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு புது கடன் வழங்க மறுப்பதாக, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கடந்த தேர்தலுக்கு முன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன்களை தள்ளுபடி செய்து, அரசு அறிவித்தது. காளிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீர்

ஈரோடு: கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு புது கடன் வழங்க மறுப்பதாக, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கடந்த தேர்தலுக்கு முன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன்களை தள்ளுபடி செய்து, அரசு அறிவித்தது. காளிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீர் திறக்கவுள்ள நிலையில், கீழ்பவானியில் ஆக.,15க்குள் நீர் திறக்கவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். கூட்டுறவு வங்கியில், கடன் கேட்டால், கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு கடன் வழங்குவதில்லை. புது உறுப்பினர்களுக்கு மட்டுமே, தகுதி உள்ளதாக கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, அனைவருக்கும் வேளாண், பயிர் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X