முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பருக்காபாத்: தான் நடத்தும் டிரஸ்ட்டிற்கு முறைகேடாக மத்திய அரசிடம் இருந்து நீதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை படேகார்க் மாவட்ட தலைமை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்
Non Bailable, warrant, Congress, leader, Salman Khurshid, wife,  misappropriation, funds case,Louise Khurshid

பருக்காபாத்: தான் நடத்தும் டிரஸ்ட்டிற்கு முறைகேடாக மத்திய அரசிடம் இருந்து நீதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை படேகார்க் மாவட்ட தலைமை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ், டாக்டர் ஜாக்கீர் ஹூசைன் நினைவு டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். உ.பி.,யின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், காதுகேட்கும் கருவி வழங்குவதற்காக, இந்த டிரஸ்டிற்கு மத்திய அரசு ரூ.71.5 லட்சம் நிதி ஒதுக்கியது.


latest tamil news



பின்னர் கடந்த 2012ல், இந்த நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. அதற்காக மாநில அரசின் கையெழுத்து போலியாக போடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை லூயிஸ் குர்ஷித் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் மறுத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாதனங்கள் வழங்குவதற்காக பல முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால், அவை அனைத்தும் காகிதங்களில் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கயாம்கஞ்ச் போலீசார், கடந்த 2017 ஜூனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2019 டிச.,30ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து படேகார்க் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் தியாகி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஜூலை-202103:49:48 IST Report Abuse
meenakshisundaram காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டு ஊழல் புரிந்த முஸ்லிம்களுக்கு முதன்மையான காரணமே காஸ்மீர் பிரச்சினை தான்.அதை காங் தீர்வு செய்யாமல் கிடப்பில் போட்டதாலேயே அப்துல்லா குடும்பம் முதல் பலர் இவாறு சலுகைகள் பெற்று அதை தவறான வழியிலும் உபயோகித்து உள்ளார்கள் .இன்னும் இம்ரான்கான் மத வெறியில் நம் நாட்டை எதிர்த்து வருகிறான் .
Rate this:
Cancel
Suresh Kumar - Salem,இந்தியா
21-ஜூலை-202117:48:21 IST Report Abuse
Suresh Kumar தெய்வம் நின்று கொல்லும்...
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
21-ஜூலை-202117:00:13 IST Report Abuse
HSR இந்த மாதிரி எத்தினி காங்கோ அனைச்சனுங்க மனைவிகள் என்னத்தெல்லாம் நடத்தினாலுகலோ அதுக்கு அப்போதைய கையாலாகாத தீமுக மற்றும் காங்கோ கொள்ளையர்கள் மக்கள் பணத்தை ஒதுக்கி கொள்ளையோ கொள்ளை அடித்தார்களோ..ஆண்டவா இந்த கொள்ளையர்களின் இருந்து என் வரிப்பணத்தை தமிழ் ஊராட்சி ஒன்றியத்தை காப்பாற்று..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X