ஊட்டியில், போக்சோ வழக்கில் இருவர் கைது!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில், 'போக்சோ' வழக்கில் இருவர் கைது!

Added : ஜூலை 21, 2021
Share
ஊட்டி: ஊட்டி அருகே கோக்கால் துாபகண்டி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, தோட்ட வேலைக்கு சென்றவர் திடீரென காணவில்லை. பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 30, கேரட் வேலைக்காக ஊட்டியில் தங்கி வேலை செய்த போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பின், சிறுமியை கடத்தி திருமணம்

ஊட்டி: ஊட்டி அருகே கோக்கால் துாபகண்டி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, தோட்ட வேலைக்கு சென்றவர் திடீரென காணவில்லை. பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 30, கேரட் வேலைக்காக ஊட்டியில் தங்கி வேலை செய்த போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பின், சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளார். போலீசார் சந்தோஷ்குமார் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாக இரண்டு குழந்தைகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊட்டி, ஓல்டு ஊட்டியில், 16 வயது சிறுமியை, வெலிங்டன் பகுதியை சேர்ந்த, ஸ்ரீ, 20, என்பவர்கள் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இருவரை கோவையில் மீட்டு போலீசார் ஊட்டிக்கு அழைத்து வந்தனர். சிறுமியை, ஸ்ரீ திருமணம் செய்துள்ளார். ஸ்ரீ மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X