ஒலிம்பிக் போட்டியில் குன்னுார் ராணுவ வீரர்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
குன்னுார் : டோக்கியோவில் இந்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் தடகள போட்டியில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந் தவர்கள் அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30, மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 29. இவர்கள் கடந்த, ஆறு மாதங்களாக வெலிங்டன் ஸ்டேடியத்தில்
 ஒலிம்பிக் போட்டியில் குன்னுார் ராணுவ வீரர்கள்

குன்னுார் : டோக்கியோவில் இந்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் தடகள போட்டியில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந் தவர்கள் அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30, மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 29. இவர்கள் கடந்த, ஆறு மாதங்களாக வெலிங்டன் ஸ்டேடியத்தில் ராணுவ விளையாட்டு மையம் சார்பில், பயிற்சியாளர் லெப்., கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையில், தடகளத்தில் தீவிர பயிற்சி பெற்றனர்.

ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 400 மீ., தொடர் ஓட்டத்தில் ஆரோக்கிய ராஜ் பங்கேற்கிறார். இவர் ஏற்கனவே பல தேசிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.ஒலிம்பிக்கில் 20 கி.மீ., நடை போட்டியில் பங்கேற்கும் இர்பான், ஏற்கனவே பல்வேறு நடை போட்டியில் ஆறு தங்கபதக்கங்கள் வென்றவர்.

இவர்களுக்கு பாராட்டு தெரிவித்த எம்.ஆர்.சி., கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், ''வீரர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் ஒலிம்பிக்கில் தகுதி பெற்று நாட்டிற்கும், நமது ராணுவத்திற்கும், ரெஜிமென்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக சென்றுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X