பொது செய்தி

இந்தியா

ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி : ஆறு அதிநவீன பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இரு தனியார் நிறுவனங்களுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.நம் கடற்படையில் 140க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையினரின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து நம் கடற்படையை

புதுடில்லி : ஆறு அதிநவீன பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இரு தனியார் நிறுவனங்களுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

நம் கடற்படையில் 140க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையினரின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து நம் கடற்படையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவ அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது. இதற்காக 'பிராஜெக்ட் 75 இந்தியா' திட்டத்தின் கீழ், நம் கடற்படைக்கு 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆறு அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த 'மஸாகன் டாக்ஸ், லார்சன் அண்ட் டியூப்ரோ' ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்கள், ஆறு நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் இதற்கான ஒப்பந்தம் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கும் நேற்று வழங்கப்பட்டது.

நீர்மூழ்கி கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் ஒன்றை, இரு நிறுவனங்களும் தங்களின் பங்குதாரராக இணைத்து, நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X