அமெரிக்காவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ: மீட்புப் பணி தீவிரம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கலிபோர்னியா மாகாணத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கலிபோர்னியா மாகாணத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.



latest tamil news



பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. காட்டுத் தீ மேலும் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மீட்டு படையினரிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது. ஆர்கன்சாஸ், நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.


latest tamil news






latest tamil news



காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 2,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 வீடுகள் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே, 70 வீடுகள் மற்றும் 100 கட்டடங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன. உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202121:15:10 IST Report Abuse
 rupya கொஞ்ச நாளுக்கு முன்னாடி கனடா எரிந்தது. இப்போ அமெரிக்கா எரிகிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஜூலை-202113:51:30 IST Report Abuse
Ramesh Sargam இந்த காட்டு தீ பிரச்சினை அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களில் பெரும் பிரச்சினை வருடா வருடம். வருடம் முழுவதும் எப்படி துப்பாக்கி சூடு ஒரு பிரச்சினையோ, அதுபோல் இதுவும் தொடர் பிரச்சினை. இரண்டுக்கும் அங்குள்ள அரசு, யார் அதிபராக வந்தாலும் ஒரு நிரந்தர முடிவு காண யோசிப்பதில்லை. அது ஏனோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X