கோடநாடு மர்மம் விலகும்? அ.தி.மு.க., மாஜியால் சலசலப்பு!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு மர்மம் விலகும்? அ.தி.மு.க., 'மாஜி'யால் சலசலப்பு!

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை : 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான மர்மங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளன' என, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா மரணத்துக்கு பின், அவருக்கு சொந்தமான நீலகிரி, கோடநாடு எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்., 23ல், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில்

சென்னை : 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான மர்மங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளன' என, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பின், அவருக்கு சொந்தமான நீலகிரி, கோடநாடு எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்., 23ல், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடையவர்கள், மர்மமான முறையில், அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கில், பல்வேறு மர்மங்கள் உள்ளன.

இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய, அக்கட்சி ஐ.டி., பிரிவு முன்னாள் மாநில செயலர் அஸ்பயர் சுவாமிநாதன், நேற்று தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை விலகாத மர்மங்கள்; வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் விரைவில்' என பதிவிட்டார்.அதன்பின், 'கோடநாடு எஸ்டேட்டில், காவலர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள், ஆதாரங்களுடன் அனைத்திற்கும் அதிர வைக்கும் விடைகள்' என பதிவிட்டார்.

இது குறித்து, சுவாமிநாதனிடம் கேட்டபோது, ''கோடநாடு தொடர்பான வழக்கில், சில ஆதாரங்கள் சிக்கி உள்ளன. விரைவில் மர்மங்கள் விலகும் என, போலீஸ் தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதையே பதிவு செய்தேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X