அரசியலை ஒதுக்கி செயல்படுவோம் மாநிலங்களுக்கு மோடி அழைப்பு| Dinamalar

அரசியலை ஒதுக்கி செயல்படுவோம் மாநிலங்களுக்கு மோடி அழைப்பு

Added : ஜூலை 21, 2021
Share
புதுடில்லி : ''அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அணியாக இணைந்து செயல்படுவோம்,'' என, மாநிலஅரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று மாலை டில்லியில் நடந்தது. கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


புதுடில்லி : ''அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அணியாக இணைந்து செயல்படுவோம்,'' என, மாநிலஅரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று மாலை டில்லியில் நடந்தது. கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் மூன்று மணி நேரம் படங்களுடன் விளக்கினார்.முக்கிய எதிர்க்கட்சியான காங்., இதில் பங்கேற்கவில்லை.

'கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. பார்லி.,யில் விவாதிக்காமல் இதுபோன்ற கூட்டத்தில் விளக்குவதை ஏற்கத்தயாராக இல்லை' என, கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பெரும்பாலான கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், மற்ற நாடுகளை விட நாம் சிறப்பான நிலையில் உள்ளோம். இருப்பினும் ஐரோப்பிய நாடான பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.அதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மத்திய, மாநில அரசுகள் ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X