வன்னியர் உள் ஒதுக்கீடுக்கு சமூக நீதி கூட்டமைப்பு எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் உள் ஒதுக்கீடுக்கு சமூக நீதி கூட்டமைப்பு எதிர்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை : 'அ.தி.மு.க., அரசு அறிவித்த வன்னியர் களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்' என, சமூக நீதி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட 143 மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 சமுதாயங்களின், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், சென்னை, தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.அரசியல்


சென்னை : 'அ.தி.மு.க., அரசு அறிவித்த வன்னியர் களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்' என, சமூக நீதி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட 143 மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 சமுதாயங்களின், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், சென்னை, தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.அரசியல் லாபத்திற்காக, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எண், 8/2021ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 99 வாயிலாக அமைக்கப்பட்ட, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின், அதன் ஒருங்கிணைப்பாளர்கள் முருகபாண்டியன், ரத்தினசபாபதி, முனிசாமி, வழக்கறிஞர் ரஜினி உள்ளிட்ட பலர் கூட்டாக அளித்த பேட்டி:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க., அரசு அறிவித்தது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட எம்.பி.சி., பிரிவில் உள்ள மற்ற சமூகத்தினர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால், எம்.பி.சி., மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகத்தினருக்கு அரசு வேலை கனவாகவே மாறிவிடும்.

தற்போது, அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் வைத்து, தி.மு.க., அரசு உடனடியாக, இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சென்னையில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X