சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் உடலுக்காக குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை : கணவர் உடலை பெறுவதில், முன்னாள் மற்றும் இன்னாள் மனைவியர் இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டைச் சேர்ந்தவர் மேகநாதன், 54. துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார்.முதுகு தண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்ட மேகநாதன், திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் இரவு


சென்னை : கணவர் உடலை பெறுவதில், முன்னாள் மற்றும் இன்னாள் மனைவியர் இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டைச் சேர்ந்தவர் மேகநாதன், 54. துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார்.முதுகு தண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்ட மேகநாதன், திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மேகநாதனின் முதல் மனைவி கல்பனா, 40. இவர்களுக்கு ஜெயகிருஷ்ணன் என்ற மகனும், ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். கல்பனாவை, 2007ல் மேகநாதன் விவாகரத்து செய்தார்.பின், சித்ரா, 36, என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவருக்கு, 13 வயதில் ஸ்ரீசரண் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், மேகநாதன் உடலை பெற கல்பனா, சித்ரா ஆகியோருக்கு இடையில் நேற்று தகராறு ஏற்பட்டது. போலீசார் முயன்றும், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முடியவில்லை. இதையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X