சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் : போலீஸ் சஸ்பெண்ட்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வேலுார் : சத்துவாச்சாரியில், மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.வேலுார் சத்துவாச்சாரி பகுதி பாலாற்றில் இருந்து, மாட்டு வண்டி, பைக்குகளில் கடந்த சில மாதங்களாக, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. மணல் கடத்தும் கும்பலிடம், போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் வந்தது. எஸ்.பி., செல்வகுமார் நடத்திய

வேலுார் : சத்துவாச்சாரியில், மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலுார் சத்துவாச்சாரி பகுதி பாலாற்றில் இருந்து, மாட்டு வண்டி, பைக்குகளில் கடந்த சில மாதங்களாக, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. மணல் கடத்தும் கும்பலிடம், போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் வந்தது. எஸ்.பி., செல்வகுமார் நடத்திய விசாரணையில், சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் தினகரன், 40, என்பவர் மணல் கடத்தல் கும்பலிடம் ஒரு நடைக்கு, 500 ரூபாய் மாமூல் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., செல்வகுமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X