பொது செய்தி

தமிழ்நாடு

வாழப்பாடியில் முதன்முதலில் பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி, இன்று (ஜூலை 21) முதன்முதலில் வாழப்பாடி தொடக்கப்பள்ளியில் தொடங்கியது. தமிழகத்தில் பிரபலமான புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தேவையான புத்தகங்கள்
வாழப்பாடியில் முதன்முதலில் பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி

வாழப்பாடி: வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி, இன்று (ஜூலை 21) முதன்முதலில் வாழப்பாடி தொடக்கப்பள்ளியில் தொடங்கியது.

தமிழகத்தில் பிரபலமான புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தேவையான புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கில், முக்கிய நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நெஸ்ட் அறக்கட்டளையுடன் இணைந்து முதன்முறையாக வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது.

இந்த புத்தக கண்காட்சி வரும் ஜூலை 28-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். சலுகை விலையில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் அனைவரும் இந்த புத்தக கண்காட்சியை கண்டு களிக்கலாம் என, எதிர்வரும் ஆண்டுகளிலும், வாழப்பாடியில் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடத்தப்படும் என, புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளரான நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார் மன்னன் தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட கல்லூரி மாணவி விவேகா கூறுகையில் ‛‛இரண்டு ஆண்டுகளாக இணைய வழியிலேயே பாடங்கள் நடைபெறுவதால், செல்போனிலேயே மூழ்கிக் கிடந்தோம். தற்போது புத்தக கண்காட்சியை தொடங்கி பல்வேறு அறிஞர்கள் மற்றும் கதைப் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கண்டு மகிழ்ந்ததால், புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் சுமதி பேசுகையில், ‛‛இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமன்றி ,குழந்தைகளும் தற்போது செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.புத்தகம் வாசிக்கின்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதனால் மனிதநேயம், சமூக அக்கறை, உறவுகளை போற்றும் பாங்கு மறைந்து வருகிறது. எனவே, நல்ல புத்தகங்களை வாங்கி வாசிக்கின்ற பழக்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

இவ்விழாவிற்கு, நியூசெஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் ரங்கராஜன்,வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார் மன்னன், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம்,வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, வாழப்பாடி அனைத்து மகளிர் நிலைய காவல் இன்ஸ்பெக்டர் சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X