எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது: மம்தா

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
கோல்கட்டா: 'எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை,' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக அவர் பேசியதாவது: நாட்டு மக்களுக்கும், மே.வங்க மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் பணம், விசாரணை அமைப்புகள், மாபியாக்களின் அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: 'எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை,' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக அவர் பேசியதாவது: நாட்டு மக்களுக்கும், மே.வங்க மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் பணம், விசாரணை அமைப்புகள், மாபியாக்களின் அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து போராடினோம். அனைத்து தடைகளையும் தாண்டி, மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டதால், நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். நமது நாடு மற்றும் உலக நாட்டு மக்களின் ஆசிகளை பெற்றுள்ளோம்.


latest tamil news



எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது. இதனால், சரத்பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை. பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. நான் யாரிடமும் பேசவில்லை. உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை. மத்திய அரசை அடக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை அழித்து விடுவார்கள். கூட்டாட்சி கட்டமைப்பை பா.ஜ., தரைமட்டமாக்கி உள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளன. நீதித்துறையால் மட்டுமே நாட்டை காக்க முடியும். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

உ.பி.,யில் நதிகளில் சடலங்கள் மிதந்து வந்தன. ஆனால், அந்த மாநிலத்தை சிறந்த மாநிலம் என பிரதமர் கூறுகிறார். உ.பி., தான் சிறந்த மாநிலம் எனக்கூறுவதில் பா.ஜ.,வுக்கு வெட்கமில்லை. விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டு எதிர்க்கட்சிகள் துன்புறுத்தப்படுகின்றன. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202108:00:11 IST Report Abuse
rajan சூன்யகாரி நீ நேர்மையாக நல்லதை பற்றி பேசினால் எதற்கு பயப்பட வேண்டும்? தூங்கும் போது கூட மோடியை எப்படி ஒழிப்பது என்பது தானே உன் சிந்தனை. கத்திக் கொண்டே இரு. எதுவும் நடக்காது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202107:47:30 IST Report Abuse
Kasimani Baskaran நானும் ரவுடிதான்
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202105:43:20 IST Report Abuse
Laks Giri ஓஹோ அப்டியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X