அமெரிக்காவில் 80% தொற்றுக்கு டெல்டா வைரசே காரணம்: ஆண்டனி பவுசி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தற்போது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.



latest tamil news



அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தற்போது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்பட்டுள்ளது.


latest tamil news




தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுவரை தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் உள்ளது. இதற்கு சமூக ஊடகங்களே காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதே பாதிப்பில் இருந்து காக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202121:08:18 IST Report Abuse
rupya டெல்டா வைரஸீக்கு அமெரிக்க கிஸ் ரொம்ப இஷ்டம்.
Rate this:
Cancel
ggh -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202115:59:45 IST Report Abuse
ggh corporate governance itself come to know, corporate buisness marketer inside its bag.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X