பேனா முனையால் டி.வி.ஆர்..ஒவியம் உருவாக்கிய சிறுமி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாள் முனையை விட பேனாவின் முனை கூரானாது என்பதை தன் எழுத்தால் நிரூபித்த தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,ஒவியத்தை பேனா முனையால் உருவாக்கியுள்ளாா் மதுரை சிறுமி உஷா.மதுரை செல்லுாரைச் சேர்ந்தவர் எம்.பி.சங்கரபாண்டியன்.கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். நீர் வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொது நல அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.தினமலரின்latest tamil news


வாள் முனையை விட பேனாவின் முனை கூரானாது என்பதை தன் எழுத்தால் நிரூபித்த தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,ஒவியத்தை பேனா முனையால் உருவாக்கியுள்ளாா் மதுரை சிறுமி உஷா.

பேனா நிப்புகளால் டி.வி.ஆர். ஓவியம் சிறுமி அசத்தல்

மதுரை செல்லுாரைச் சேர்ந்தவர் எம்.பி.சங்கரபாண்டியன்.கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். நீர் வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொது நல அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

தினமலரின் நீண்ட கால வாசகரான இவர் நான்காவது படிக்கும் தனது மகள் உஷாவிற்கு நம் தேசத்தை காக்க போராடிய தலைவர்கள் பற்றி சொல்லி சொல்லி வளர்த்து வருகிறார்.இதில் உஷாவிற்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பய்யரின் உருவமும் வாழ்க்கை வரலாறும் மிகவும் பிடித்துப் போனது.


latest tamil news


அவரது 37 வது நினைவு நாளான இன்று(ஜூலை 21) அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்த விரும்பினார். பேனா முனையில் சக்தியை உலகிற்கு பறைசாற்றிய டி.வி.ஆர்.,ஒவியத்தை பேனா முனையால் வரைய முடிவு செய்தார்.
தனது விருப்பத்தை தந்தையிடம் சொல்லவும் அவர் இந்தக் காலத்தில் பேனா முனை எங்கே கிடைக்கிறது என்று மகளின் விருப்பத்தை தட்டிக்கழிக்காமல் பேனா முனைகள் எங்கே விற்பனையாகும் என்பதை தேடி அலைந்திருக்கிறார். கடைசியில் புதுமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கடையில் கிடைப்பதை அறிந்து அங்கு சென்று மொத்தமாக வாங்கிக் கொண்டு போய் மகளிடம் கொடுத்திருக்கிறார்.

இரண்டு வாரத்திற்கு முன்பாகவே இதற்கான வேலையை துவங்கிய உஷா தனக்கு திருப்தி வரும் வரை பென்சிலில் டி.வி.ஆர்.,ஒவியத்தை வரைந்திருக்கிறார், இதற்காக சில நாட்கள் இரவு நேரத்தில் கூட விழித்திருந்திருக்கிறார்.

தான் இரவில் விழித்திருந்து ஒவியம் வரையும் போது குடும்பத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காக வீட்டின் மெயின் விளக்கை அணைத்துவிட்டு சிறிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் வரைந்திருக்கிறார்.

திருப்தியாக ஒவியம் அமைந்ததும் அந்த ஒவியத்தின் மீது ‛நிப்' என்று சொல்லக்கூடிய இங்க் பேனாவின் முனைகளை அடுக்கிக் கொண்டே வந்திருக்கிறார் ஆனால் அது ஒரிஜினல் முகத்தை மறைப்பது போல உணரவே பென்சில் ஒவியத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு ஒவியத்தை சுற்றிலும் பேனா முனைகளை அடுக்கியவர் அவரது பெயரையும் பேனா முனையாலயே அமைத்துவிட்டார்.

நேற்று இரவு முழுமை பெற்ற இந்த ஒவியத்தை டி.வி.ஆரின் 37 வது நினைவு தினமான இன்று மதுரை தினமலர் அலுவலகத்தில் உள்ள டி.வி.ஆர்.,சிலை முன்பாக வைத்து வணங்கிவிட்டு பின் அலுவலகத்தில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.

சிறுமி உஷாவை பாராட்ட நினைப்பவர்கள் அவரது தந்தை சங்கரபாண்டியன் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்:99949 70021.

-எல்.முருகராஜ்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202116:53:28 IST Report Abuse
ராஜா, பெங்களூர் பாராட்டுக்கள். டி.வி.ஆர் சாதனைகள் பள்ளி புத்தகத்தில் பாடமாக வைத்தால் தமிழகத்தில் தேசிய சிந்தனை வளரும்.
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
21-ஜூலை-202116:28:39 IST Report Abuse
Trichy Mahadevan வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X