திரிபுராவில் திரிணாமுல் காங்., தலைவர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அகர்தாலா: திரிபுரா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஆசிஷ் லால் சின்ஹா ​​உட்பட பல தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இன்று (ஜூலை21) ஊர்வலமாக கூடி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 1993 ல் கோல்கட்டாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் ஆர்வலர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக திரிபுரா மாநில யூனகோட்டி மாவட்டத்தில் திரிணமுல்

அகர்தாலா: திரிபுரா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஆசிஷ் லால் சின்ஹா ​​உட்பட பல தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இன்று (ஜூலை21) ஊர்வலமாக கூடி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1993 ல் கோல்கட்டாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் ஆர்வலர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக திரிபுரா மாநில யூனகோட்டி மாவட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இன்று ஊர்வலமாக வந்தனர். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக கூடியதாக டி.எம்.சி.யின் உனகோட்டி மாவட்டத் தலைவர் அஞ்சன் சக்ரவர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கைலாஷாஹர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பார்த் முண்டா கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X