மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்பு: பார்லி., குழு விசாரிக்க முடிவு

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: பெகாசஸ் நிறுவன மென்பொருள் வாயிலாக, மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில், வரும் 28ம் தேதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின்
Pegasus Scandal, Shashi Tharoor, MP, Committee, Assess Facts

புதுடில்லி: பெகாசஸ் நிறுவன மென்பொருள் வாயிலாக, மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில், வரும் 28ம் தேதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் பிரஹலாத் படேல் காங். முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளன. இந்த விவகாரம் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதும், பா.ஜ., மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு விசாரணை நடத்த உள்ளது.


latest tamil news




வரும் 28ம் தேதி நடக்கும் ஆலோசனையின் போது, உள்துறை, தொலைதொடர்புத்துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கவும், இந்த குழு திட்டமிட்டு உள்ளது. குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202107:46:38 IST Report Abuse
Kasimani Baskaran அடுத்த தேர்தல் வரை ஜவ்வாக இழுத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று முடித்து வைப்பார்கள். அம்நெஸ்டி வெளியிட்டுள்ள கட்டுரையின் படி பத்திரிக்கையாளர்கள் வேவு பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் வாதிகளோ அல்லது அதிகாரிகளோ வேவு பார்க்கப்பட்டதாக தகவல் இல்லை. வயர்தான் இது போன்ற 'இழுத்துவிடும்' வேலையில் இறங்கியிருக்கிறது. வயரை செயலிழக்கச்செய்தால் நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-ஜூலை-202120:56:04 IST Report Abuse
Sivagiri தமிழ்நாட்டு வழக்கப் படி - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்கலாம் - ஆறு மாதம் முதல் ஆறு ஆண்டுகள் வரை கால கேடு வழங்கலாம் - -
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202119:05:00 IST Report Abuse
Janarthanan வெறும் யுகங்களை வைத்து என்ன விசாரணை செய் போறாங்க ???? ஓட்டு ஒட்டு கேட்கப்பட்டது என்ற கூட்டத்திடம் அவங்க போன் போர்செனிக் அனாலிசிஸ் கொடுக்க சொல்லுங்க பார்ப்போம் ஒருத்தரும் கொடுக்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X