மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்பு: பார்லி., குழு விசாரிக்க முடிவு| Dinamalar

மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்பு: பார்லி., குழு விசாரிக்க முடிவு

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (11)
Share
புதுடில்லி: பெகாசஸ் நிறுவன மென்பொருள் வாயிலாக, மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில், வரும் 28ம் தேதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின்
Pegasus Scandal, Shashi Tharoor, MP, Committee, Assess Facts

புதுடில்லி: பெகாசஸ் நிறுவன மென்பொருள் வாயிலாக, மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில், வரும் 28ம் தேதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் பிரஹலாத் படேல் காங். முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளன. இந்த விவகாரம் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதும், பா.ஜ., மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு விசாரணை நடத்த உள்ளது.


latest tamil news
வரும் 28ம் தேதி நடக்கும் ஆலோசனையின் போது, உள்துறை, தொலைதொடர்புத்துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கவும், இந்த குழு திட்டமிட்டு உள்ளது. குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X