ஸ்மிருதி இரானி பற்றி ஆபாச பதிவு: உ.பி., பேராசிரியர் கைது

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
லக்னோ: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாச கருத்துக்களை வெளியிட்ட உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத்தை சேர்ந்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக, எஸ்.ஆர்.கே கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் ஷாஹர்யார் அலி என்பவர் கடந்த மார்ச் மாதம் ஆபாச பதிவிட்டார். அவர்
Uttar Pradesh, உத்தரபிரதேசம், smiriti Irani,

லக்னோ: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாச கருத்துக்களை வெளியிட்ட உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத்தை சேர்ந்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக, எஸ்.ஆர்.கே கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் ஷாஹர்யார் அலி என்பவர் கடந்த மார்ச் மாதம் ஆபாச பதிவிட்டார். அவர் மீது பிரோசாபாத் காவல்துறை வழக்கு பதிந்தது. கல்லூரி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது.


latest tamil newsஉடனே தனது பேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனக் கூறி அவர் ஜாமின் மனுவை நிராகரித்தது. இம்மாதம் தொடக்கத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவர் முன் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரோசாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
22-ஜூலை-202111:42:58 IST Report Abuse
pradeesh parthasarathy என்ன வழக்கு பதிவு பண்ணினீங்க.... இதுவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமோ...?
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
24-ஜூலை-202103:07:02 IST Report Abuse
Venkata Krishnanஇதபாருங்க.எப்படி திசைதிருப்பி கிண்டலடிக்கிறான்(மிக்கமரியாதையடன்)நம்ப ஆளு....
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202110:39:37 IST Report Abuse
Rasheel தாலிபான்களுக்கு பெண்களை மதிக்க தெரியாது.. அவர்கள் கணக்குப்படி பெண்கள் பிள்ளை பெற மட்டுமே.
Rate this:
Cancel
22-ஜூலை-202105:38:17 IST Report Abuse
ராஜா அவருக்கு தெரிந்ததை, சொல்லிக்கொடுத்ததை சமூக வலைத்தளத்தில் செய்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X