பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை: மோகன்பகவத் உறுதி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கவுஹாத்தி: ‛‛இந்தியாவில் குடியுரிமை சட்டம் காரணமாக முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்,'' என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதிபடத் தெரிவித்தார்.2 நாள் பயணமாக அசாம் வந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கவுகாத்தியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதாவது: சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் என, நாடு பிரிவினைக்கு பின்னர், இந்தியாவின் முதல் பிரதமர்
மோகன் பகவத், Muslim, CAA, RSS,  Mohan Bhagwat

கவுஹாத்தி: ‛‛இந்தியாவில் குடியுரிமை சட்டம் காரணமாக முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்,'' என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதிபடத் தெரிவித்தார்.

2 நாள் பயணமாக அசாம் வந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கவுகாத்தியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதாவது: சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் என, நாடு பிரிவினைக்கு பின்னர், இந்தியாவின் முதல் பிரதமர் தெரிவித்திருந்தார். தற்போதும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. எதிர்காலத்திலும் தொடரும். ஆனால், பாகிஸ்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

குடியுரிமை சட்டத்தால், முஸ்லிம்கள் எந்த பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி.) ஆகியவை அரசியல் காரணமாக சிலரால் பிரச்னையாக்கப்பட்டு வருகிறது. குடியுரிமைச் சட்டத்தால் எந்தவொரு முஸ்லிமும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார். குடியுரிமைச் சட்டம் என்பது அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்கும்.


latest tamil news
அச்சுறுத்தல்கள் மற்றும் பயம் காரணமாக நம் நாட்டிற்கு வர விரும்பும் சிலர் இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்வோம். என்.ஆர்.சி. மூலம் குடிமக்கள் யார்? என்பதை அறிய அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டங்களால் வகுப்புவாத பிரச்னையை உருவாக்கி ஒரு பகுதியினர் அரசியல் லாபம் பெற விரும்புகிறார்கள்.

மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியன குறித்து உலக நாடுகளிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டியதில்லை. அவை நமது ரத்தத்தில்ஊறியது. அவற்றை நமது நாடு, அமல்படுத்தி உயிர்ப்புடன் வைத்து உள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-ஜூலை-202114:01:28 IST Report Abuse
Sridhar இவருக்கு வயதாகிவிட்டது பாவம். CAA /NRC யால் நிச்சயமாக முஸ்லீம்களுக்கு பாதிப்பு உண்டாகும். எந்த முஸ்லிம்களுக்கு? அயல்நாட்டிலிருந்து கள்ளத்தனமாக இங்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம்களுக்கு. நம் நாட்டில் ஏற்கனவே குடிமகன்களாக வசித்துவரும் முஸ்லிம்களுக்கு அல்ல. ஆனால், இங்கு பிரச்சினையே வேறு. முஸ்லிம்கள் நாட்டின் எல்லைக்கோடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு சகோதரத்துவம் அதிகம். உலகின் அணைத்து இடங்களில் இருக்கும் முஸ்லிம்களும் ஒரு குடைக்குள் வருபவர்கள். ஆகவே, அண்டைநாடுகளிலிருந்து கள்ளத்தனமாக குடியேறி வந்திருந்தாலும் சரி, அல்லது அகதிகளாக வந்திருந்தாலும் சரி, அவர்கள் அனைவரயும் சகோதரர்களாக பாவிப்பதால், அரசு இயற்றிஉள்ள சட்டத்தை எதிர்க்கிறார்கள். பலஸ்தீனியத்திலோ துர்கியிலோ அவர்கள் சகோதரனுக்கு ஒன்றென்றால் கூட உடனே குரல் கொடுப்பவர்கள் அவர்கள். நாடு எனும் பூகோள எல்லைகள் அவர்களுக்கு முக்கியமல்ல. ஆகவே, நாடு எனும் எல்லையை வரைந்து அதற்குள் செயல்படும் அரசு தன சட்டங்களை அந்த நாட்டின் நன்மைகளை கருதி இயற்றும்போது, இந்த எதிர்ப்பின் தன்மையை புரிந்துகொண்டு அதற்க்கு ஏற்றாற்போல் செயல்படவேண்டுமே தவிர, 'உங்களுக்கு பாதிப்பே இல்லை' போன்ற வாக்கியங்கள் அவர்களிடம் செல்லாது. மேலும், 'ஒரே DNA' 'எல்லா மதமும் ஒன்றே' போன்ற கோஷங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாட்டில் எவ்வளவோ கலவரங்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்றும் காஷ்மீர் காரன் தனியே செல்வதையே விரும்புகிறான். இவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், போன தலைமுறை தலைவர்கள் போல் நடந்துகொள்வது ஒரு தீர்வையும் கொண்டுவராது. முடிந்தால், அம்பத்கர் எழுதியதை படித்து அவர் கருத்துக்களை ஆழ்ந்து கவனியுங்கள். நூறு வருஷஙகளின் சரித்திரத்தை சற்றே பின்திரும்பி ஆராயுங்கள். பிரச்சனைகளை தீர்க்க இப்போது எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன வென்று தெளிவு பிறக்கும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202110:38:04 IST Report Abuse
Rasheel உலகமெல்லாம் யாரால் யாருக்கு பாதிப்பு என்பதை மக்கள் தெரிந்து கொண்டு உள்ளார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட ஒரு சிறு பெண்ணை தலிபான்கள் அவள் குடும்பம் முன்னால் தூக்கி கொண்டு சென்று உள்ளனர். பாகிஸ்தானிலும், பங்களாதேஷில் வாழ முடியாமல் துன்பம் அறுபவிப்பார்கள் எவர் என்பது உங்களுக்கு தெரியாது?
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
22-ஜூலை-202106:49:56 IST Report Abuse
Kalaiselvan Periasamy முஸ்லிம்களை மதிக்காமலா அப்துல் கலாமை இந்திய அதிபராக இருக்கச் செய்தார்கள் ? எல்லாம் சில மத வெறியர்களால் வந்த வினை இது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X