பிளஸ் 2வில் 21 பேர் ?90க்கு மேல் மார்க்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2வில் 21 பேர் ?90க்கு மேல் 'மார்க்'

Added : ஜூலை 21, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 21 மாணவ, மாணவியர், 600க்கு, 590க்கு மேல் மதிப்பெண் பெற்று, அசத்தியுள்ளனர். பிளஸ் 2வில், ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த, 23 ஆயிரத்து, 890 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதில், 600 மதிப்பெண்களில், 590 மதிப்பெண்களுக்கு மேல், 21 மாணவ, மாணவியர் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், 550 மதிப்பெண்ணுக்கு மேல்,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 21 மாணவ, மாணவியர், 600க்கு, 590க்கு மேல் மதிப்பெண் பெற்று, அசத்தியுள்ளனர். பிளஸ் 2வில், ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த, 23 ஆயிரத்து, 890 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதில், 600 மதிப்பெண்களில், 590 மதிப்பெண்களுக்கு மேல், 21 மாணவ, மாணவியர் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், 550 மதிப்பெண்ணுக்கு மேல், 2,206 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 6,222 மாணவ, மாணவியரும் பெற்றுள்ளனர். ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரி, கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். மாணவ, மாணவியர் நாளை முதல் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X