பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3 லட்சம் வரை கடன்: வேளாண் துறை யோசனை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்குகளில், இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு, 75 சதவீத பொருளீட்டு கடன் பெற்றுத் தரப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் மற்றும் துணை இயக்குனர் சாவித்திரி கூறியதாவது: ஈரோடு மாவட்ட விற்பனை குழு மூலம், 19 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இயங்குகின்றன. மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய், மக்காசோளம்,

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்குகளில், இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு, 75 சதவீத பொருளீட்டு கடன் பெற்றுத் தரப்படுகிறது.


இதுகுறித்து மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் மற்றும் துணை இயக்குனர் சாவித்திரி கூறியதாவது: ஈரோடு மாவட்ட விற்பனை குழு மூலம், 19 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இயங்குகின்றன. மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய், மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி, எள், கரும்பு சர்க்கரை, சூரியகாந்தி விதைகள் ஏலம் நடக்கிறது. கட்டுப்படியான விலை கிடைக்காவிட்டால், அங்குள்ள கிடங்கில் விளைபொருட்களை இருப்பு வைக்கலாம். மாவட்டத்தில் ஆறு இடங்களில் குளிர்பதன கிடங்குகள் உள்ளன. கொப்பரை தேங்காய், மஞ்சள் நிறம் மாறாமல் உலர்த்தும் சூரிய உலர்த்தி பெருந்துறை, அவல்பூந்துறை விற்பனை கூடங்களில் உள்ளன. கிடங்குகளில் வைக்கப்படும் விளை பொருளுக்கு, விளை பொருளின் மதிப்பில், 75 சதவீதம் அல்லது அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரை, 5 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். அனைத்து விளை பொருட்களுக்கும், 180 நாட்கள் காலக்கெடுவில் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X