தாளவாடி பஸ்களில் தாராள கூட்டம்; மூன்றாவது அலைக்கு சாதகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாளவாடி பஸ்களில் தாராள கூட்டம்; மூன்றாவது 'அலைக்கு' சாதகம்

Added : ஜூலை 21, 2021
Share
பு.புளியம்பட்டி: தாளவாடியில் இருந்து, அரசு பஸ்களில், அதிக எண்ணிக்கையில் செல்லும் பயணிகளால், கொரோனா மூன்றாவது அலை அபாயம், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலால், தமிழகம்-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சத்தியமங்கலத்தில் இருந்து தமிழக எல்லையான தாளவாடி மலைப்பகுதி வரை, தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தாளவாடி வரை சென்று,

பு.புளியம்பட்டி: தாளவாடியில் இருந்து, அரசு பஸ்களில், அதிக எண்ணிக்கையில் செல்லும் பயணிகளால், கொரோனா மூன்றாவது அலை அபாயம், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலால், தமிழகம்-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சத்தியமங்கலத்தில் இருந்து தமிழக எல்லையான தாளவாடி மலைப்பகுதி வரை, தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தாளவாடி வரை சென்று, அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல் கர்நாடகா பயணிகள், தாளவாடி வழியாக வருகின்றனர். இதனால் தாளவாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அரசு பஸ்களில், சமீப நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் நெருக்கியடித்து பயணிக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X