பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கரையோரம் 'அடர் வனம்' திட்டம்: 400 மரக்கன்று நட்டு நல்ல பணி துவக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், ஆற்றங்கரையோரம் அடர் வனம் உருவாகிறது. அசத்தலான திட்டத்தை, அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மெத்தனம் காட்டாமல் பணி நடந்தால், வனம் விரைவில் உருவாகி, வானம் தொட முயலும்.ஈரோடு மாநகராட்சியில், 32.39 கோடி ரூபாயில், நேதாஜி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, வைராபாளையம் காவிரி ஆற்றை ஒட்டிய பகுதியில், குப்பை கிடங்கு மீட்கப்பட்டு அடர்வனமாக மாற்றும் துவக்க நிகழ்ச்சி

ஈரோடு: ஈரோட்டில், ஆற்றங்கரையோரம் அடர் வனம் உருவாகிறது. அசத்தலான திட்டத்தை, அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மெத்தனம் காட்டாமல் பணி நடந்தால், வனம் விரைவில் உருவாகி, வானம் தொட முயலும்.


ஈரோடு மாநகராட்சியில், 32.39 கோடி ரூபாயில், நேதாஜி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, வைராபாளையம் காவிரி ஆற்றை ஒட்டிய பகுதியில், குப்பை கிடங்கு மீட்கப்பட்டு அடர்வனமாக மாற்றும் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பணிகளை துவக்கி வைத்து, அடர்வனத்துக்காக மரக்கன்றை நட்டார்.

அடர்வனம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை பல ஆண்டாக, வைராபாளையம் காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டது. வெள்ளப்பெருக்கு, மழை காலங்களில் பல டன் குப்பை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அங்குள்ள குடிநீரேற்று நிலையம் மூலம், அசுத்தமான நீர் மக்களுக்கு பல ஆண்டாக வழங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இக்குப்பை பிரிக்கப்பட்டு, 2019 செப்., முதல் பயோமைனிங் பணி துவங்கியது. அங்கு குவிந்திருந்த, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் டன் குப்பையில், ?,500 டன் பிளாஸ்டிக் கழிவு பிரித்து எடுத்து மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. மக்கும் குப்பை உரமாகவும், பிற பயன்பாட்டுக்கும் அனுப்பப்பட்டது. மூன்று மாத்துக்கு முன் இப்பணிகள் நிறைவடைந்தது. இவ்விடத்தில், 3.41 ஏக்கரில் அடர் வனம் ஏற்படுத்த திட்டமிட்டு, 400 கன்றுகள் நடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X