பொது செய்தி

தமிழ்நாடு

வசூல் அவலத்துக்கு முடிவு: பிம்பத்தை உடைத்து விடிவு: இளைஞரால் திருநங்கை வாழ்வில் திருப்பம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பவானி: வசூலித்து வாழும் அவலத்துக்கு முடிவு கிடைத்துள்ளது. இதையே சக திருநங்கையரும் விரும்புவதாக, தன் வாழ்வில் திருப்பம் பெற்ற திருநங்கை, ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.பவானி, வர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்தவர் அருளி, 21; திருநங்கையான இவர் டிப்ளமோ படித்துள்ளார். சென்னையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் திரும்பினார். சக திருநங்கையருடன் சேர்ந்து,

பவானி: வசூலித்து வாழும் அவலத்துக்கு முடிவு கிடைத்துள்ளது. இதையே சக திருநங்கையரும் விரும்புவதாக, தன் வாழ்வில் திருப்பம் பெற்ற திருநங்கை, ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


பவானி, வர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்தவர் அருளி, 21; திருநங்கையான இவர் டிப்ளமோ படித்துள்ளார். சென்னையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் திரும்பினார். சக திருநங்கையருடன் சேர்ந்து, கடைகளில் பணம் வசூலித்து வந்தார். பவானி புது பஸ் ஸ்டாண்டில், ஒரு மொபைல்போன் கடைக்கு, பணம் கேட்டு சென்றார். அதேசமயம், ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என்று, கடை உரிமையாளர் ஜெகதீஸிடம் கேட்டுள்ளார். தனது கடையிலேயே அருளிக்கு வேலை தந்து, வாழ்வில் திருப்பமும் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அருளி கூறியதாவது: திருநங்கை என்றாலே, வசூல் செய்து வாழ்வாதாரம் நடத்துபவர்கள் என்கிற பிம்பத்தை உடைக்கவே, இந்த வேலையில் சேர்ந்துள்ளேன். இதைத்தான் மற்ற திருநங்கையரும் விரும்புகின்றனர். அவர்களுக்கும் வேலை கிடைத்தால், கடை கடையாக சென்று, வசூலிப்பதை நிறுத்திக்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X