பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் குழந்தைகளுக்கான நூலகம்; எஸ்.பி., திறந்தார்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு உணர்வுகள் அமைப்பு சார்பில், கடம்பூர் அடுத்த குன்றி மலை கிராமத்தில், மலைவாழ் குழந்தைகளுக்காக சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா நடந்தது. உணர்வுகள் அமைப்பு தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். எஸ்.பி., சசிமோகன், நூலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: வரும் நாட்களில் இந்நூலகத்தை குழந்தைகள் பயன்படுத்த வேண்டும். நூலகத்துக்கு குழந்தைகள் வருவதற்கு இனிப்பு, பரிசு

ஈரோடு: ஈரோடு உணர்வுகள் அமைப்பு சார்பில், கடம்பூர் அடுத்த குன்றி மலை கிராமத்தில், மலைவாழ் குழந்தைகளுக்காக சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா நடந்தது. உணர்வுகள் அமைப்பு தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். எஸ்.பி., சசிமோகன், நூலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: வரும் நாட்களில் இந்நூலகத்தை குழந்தைகள் பயன்படுத்த வேண்டும். நூலகத்துக்கு குழந்தைகள் வருவதற்கு இனிப்பு, பரிசு பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்தி, ஆர்வமூட்டுங்கள். மலை கிராம குழந்தைகள் மருத்துவராக, பொறியாளராக, சிறந்த வல்லுனராக உருவாக்க, இந்நூலகம் பயன்படும். இவ்வாறு அவர் பேசினார். உதவி இயக்குனர் (பஞ்.,) விஜயசங்கர், குன்றி பஞ்., தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் தலைவர் ரவி, மலைவாழ் கிராம மக்கள் சங்க தலைவர் ராமசாமி, அறிவு திட்ட இயக்குனர்கள் ஜோதி, ஹக்கீம் பாட்ஷா, அலாவுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X