சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுந்தப்பாடியில் குடும்பத்தை துண்டாடிய 'குடி': தீக்குளித்த மனைவி சாவு; கணவன் 'சீரியஸ்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோபி: போதை கணவரால், தீக்குளித்த மனைவி இறந்த நிலையில், காப்பான்ற முயன்ற கணவன், கவலைக்கிடமாக உள்ளார். கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 35; பெருந்துறை சிப்காட்டில், டையிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி ஸ்ரீபிரியா, 30; தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குடிபோதைக்கு அடிமையான சரவணன், ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து

கோபி: போதை கணவரால், தீக்குளித்த மனைவி இறந்த நிலையில், காப்பான்ற முயன்ற கணவன், கவலைக்கிடமாக உள்ளார். கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 35; பெருந்துறை சிப்காட்டில், டையிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி ஸ்ரீபிரியா, 30; தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குடிபோதைக்கு அடிமையான சரவணன், ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். இதனால் தம்பதி இடையே, நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. அப்போது மனமுடைந்த ஸ்ரீபிரியா, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீப்பிடித்து எரிந்த மனைவியை சரவணன் காப்பாற்ற முயன்றார். ஆனாலும், சம்பவ இடத்தில் ஸ்ரீபிரியா கரிக்கட்டையானார். பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X