பொது செய்தி

தமிழ்நாடு

பாதை அமைக்க உடன்பாடு; 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம், இந்திரா நகரில் வசிக்கும் மக்களுக்கு, 1 கி.மீ., தூரத்துக்கு பொதுப்பாதை அமைக்க, தனிநபர் இடையூறு செய்தார். இப்பிரச்னை, 20 ஆண்டாக நீடித்தது. இதனால், போக்குவரத்துக்கு வழியின்றி அவதிப்பட்ட மக்கள், பேச்சு நடத்தி சுமுகத்தீர்வு ஏற்படுத்த, வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று மனு கொடுத்தனர். இதையடுத்து, தாசில்தார் மாணிக்கம் தலைமையில்

வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம், இந்திரா நகரில் வசிக்கும் மக்களுக்கு, 1 கி.மீ., தூரத்துக்கு பொதுப்பாதை அமைக்க, தனிநபர் இடையூறு செய்தார். இப்பிரச்னை, 20 ஆண்டாக நீடித்தது. இதனால், போக்குவரத்துக்கு வழியின்றி அவதிப்பட்ட மக்கள், பேச்சு நடத்தி சுமுகத்தீர்வு ஏற்படுத்த, வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று மனு கொடுத்தனர். இதையடுத்து, தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு, பாதை அமைக்க, தனிநபர் நிலத்தை கொடுக்க முன்வந்தார். இதனால், 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. மேலும், அரசு ஒதுக்கிய நிதியில் சாலை அமைக்க முடிவால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தீர்வு ஏற்படுத்தி கொடுத்த வருவாய்த்துறையினர், போலீசாருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X