பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.30 கோடியில் கோவில் நிலம் மீட்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டையை சேர்ந்தவர் முத்துகவுண்டர், 70. இவர், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், 2,610 சதுரடி நிலத்தை வாடகைக்கு பயன்படுத்தினார். ஐந்து ஆண்டுக்கு மேலாக, எட்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 343 ரூபாய் வாடகை செலுத்தாமல் இருந்தார். இவர் மீது, சேலம், அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்றி,

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டையை சேர்ந்தவர் முத்துகவுண்டர், 70. இவர், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், 2,610 சதுரடி நிலத்தை வாடகைக்கு பயன்படுத்தினார். ஐந்து ஆண்டுக்கு மேலாக, எட்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 343 ரூபாய் வாடகை செலுத்தாமல் இருந்தார். இவர் மீது, சேலம், அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்றி, நிலுவை தொகை வசூலிக்க உத்தரவிட்டது. நேற்று, சேலம் உதவி கமிஷனர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி, போலீசார் பாதுகாப்புடன், 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,610 சதுரடி நிலத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைத்து, கம்பி வேலி அமைத்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டையை சேர்ந்த, சுபாஷ்சந்திரபோஸ், 60 சதுரடி நிலத்துக்கு, நிலுவை தொகை, 13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X