மகன்கள் கைவிட்ட பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகன்கள் கைவிட்ட பரிதாபம்

Added : ஜூலை 21, 2021
Share
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன் முதல் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி ஸ்ரீரங்கம்மாள், 70. இவர், மண்ணெண்ணெய் கேனை பையில் மறைத்துக்கொண்டு, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் வந்தார். பாதுகாப்பு பணி போலீசார், சோதனையில், கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது, 'என் மூன்று மகன்கள், ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. என் பெயரில் இருந்த வீடு, நிலத்தை எழுதி வாங்கி கொண்டு,

சேலம்: சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன் முதல் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி ஸ்ரீரங்கம்மாள், 70. இவர், மண்ணெண்ணெய் கேனை பையில் மறைத்துக்கொண்டு, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் வந்தார். பாதுகாப்பு பணி போலீசார், சோதனையில், கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது, 'என் மூன்று மகன்கள், ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. என் பெயரில் இருந்த வீடு, நிலத்தை எழுதி வாங்கி கொண்டு, இப்போது சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துகின்றனர். வீடு, நிலத்தை திரும்ப பெற்று தர வேண்டும்' என, அவர் கூறினார். பின், போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X