கோவிட் 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கோவிட் 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது,'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார்.மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‛‛ஆக்சிஜன் பற்றாக்குறையால் கோவிட் 2-வது அலையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன்
corona, oxygen, priyanka, priyankagandhi, priyanka gandhi vadra, ஆக்சிஜன், பிரியங்கா, பிரியங்கா காந்தி,

புதுடில்லி: ‛‛கோவிட் 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது,'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‛‛ஆக்சிஜன் பற்றாக்குறையால் கோவிட் 2-வது அலையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது,” எனத் தெரிவித்திருந்தார். பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று (ஜூலை 21) டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:‛ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கோவிட் 2-வது அலையில் உயிரிழப்புகள் நடந்தன. அப்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது. 2-வது அலையின்போது, ஆக்சிஜன் வழங்குவதற்குப் போதுமான சிலிண்டர்கள் மத்திய அரசிடம் இல்லாததால், கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். பார்லிமென்ட் குழுவின் அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆக்சிஜன் சப்ளைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு பிரியங்கா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூலை-202114:18:09 IST Report Abuse
Vena Suna ஆதாரம் இருந்தால் வழக்கு போடட்டும்...பொய்களை பரப்ப வேண்டாம்...பொய்களை சொல்லி வெல்வது தவறு
Rate this:
Cancel
22-ஜூலை-202108:44:57 IST Report Abuse
பேசும் தமிழன் பிறந்த பிறப்பு அப்படி.... அண்ணனும் தங்கையும் பதவி இல்லமால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று உளறி கொண்டு திரிகிறார்கள்..... மக்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது... பெயருக்கு பின்னால் கான் போய் காந்தி எப்படி வந்தார்.... எதுக்கு வந்தார் (ஓட்டுக்காக) என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202107:54:23 IST Report Abuse
 rajan அலறு அலறு நன்றாக அலறு உன் ஆயுள் உள்ள வரை வயிற்றெரிச்சல்தான் உனக்கும் தம்பிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X