பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தாரை மாற்றக்கோரி ஊழியர்கள் தர்ணா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் தெற்கு தாசில்தாரை மாற்றக்கோரி, அதன் ஊழியர்கள், பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் தெற்கு தாசில்தார் சீனிவாசன். இவர், பதவிக்கு வந்த ஆறு மாதமாக, ஊழியர் விரோதப்போக்கை கையாள்வதாக, அடிக்கடி புகார் எழுந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பலமுறை அறிவுறுத்தியும், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதை கண்டித்து, மொத்த

சேலம்: சேலம் தெற்கு தாசில்தாரை மாற்றக்கோரி, அதன் ஊழியர்கள், பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் தெற்கு தாசில்தார் சீனிவாசன். இவர், பதவிக்கு வந்த ஆறு மாதமாக, ஊழியர் விரோதப்போக்கை கையாள்வதாக, அடிக்கடி புகார் எழுந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பலமுறை அறிவுறுத்தியும், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதை கண்டித்து, மொத்த ஊழியர்களும் பணியை புறக்கணித்து, நேற்று காலை, 11:00 மணிக்கு நுழைவாயில் முன் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வள்ளிதேவி தலைமை வகித்தார். அதில் ஊழியர்கள், படிக்கட்டில் அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தாசில்தாரை இடமாற்றம் செய்யும் வரை, போராட்டம் தொடரும் என, அறிவிக்கப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு ஆர்.டி.ஓ., விஷ்ணுவர்த்தினி, பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்க, போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X