பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று இறப்பு சான்று துரிதமாக பெற அரசு மருத்துவமனையில் 4 பேர் குழு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா இறப்பு சான்று சரிவர வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது. அதன் குறை களைவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. அதில் முறையாக விண்ணப்பித்தும், தற்போது நிலுவை வைத்துள்ள, 150 இறப்பு சான்றுகளை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு துரிதமாக வழங்க, மருத்துவர்கள் ஒத்துழைக்க

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா இறப்பு சான்று சரிவர வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது. அதன் குறை களைவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. அதில் முறையாக விண்ணப்பித்தும், தற்போது நிலுவை வைத்துள்ள, 150 இறப்பு சான்றுகளை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு துரிதமாக வழங்க, மருத்துவர்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சான்று பெறாதவர்கள், குழுவை அணுகி உடனே பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி விதிப்படி, சளிதடவல், சி.டி., ஸ்கேன் பரிசோதனை அறிக்கைப்படி, இறப்பு சான்று வழங்கப்படுவதாக, மருத்துவர்கள் கூறினர். அதன்படி, நேற்று, 100 சான்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை, 340 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.


இறப்பு பதிவு விபரம்: மருத்துவமனையில், கடந்த ஜனவரியில், 518, பிப்ரவரி, 362, மார்ச், 432, ஏப்ரல், 592, மே, 1,608, ஜூன், 1,202 பேர் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா சான்று எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X