பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஓமலூர் அடுத்த பாகல்பட்டி, டி.பி.சி., பாலிடெக்னிக்கில், 2020 - 21ல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், சிவில், பெட்ரோ கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கணினி துறையில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்தில், கடந்த, 19ல்

ஓமலூர்: ஓமலூர் அடுத்த பாகல்பட்டி, டி.பி.சி., பாலிடெக்னிக்கில், 2020 - 21ல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், சிவில், பெட்ரோ கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கணினி துறையில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்தில், கடந்த, 19ல் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, திரிவேணி கார் நிறுவனம் வளாகத்தேர்வை நடத்தியது. முன்னதாக, கல்லூரி தாளாளர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேற்கண்ட நிறுவனத்தை சார்ந்த நிர்வாக இயக்குனர், மாணவர்களை, எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்தார். வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்களுக்கு, அந்நிறுவனத்தை சார்ந்த நிர்வாக இயக்குனர் விண்டோ, மேலாளர் கார்த்திகேயன், கல்லூரி தலைவர் துரைசாமி, தாளாளர் கணேசன், பணி நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி முதல்வர் சக்திவேல், வெங்கடேஸ்வரன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X