பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் போலீஸ் உடற்தகுதி தேர்வு ஹால் டிக்கெட்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்போர், ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கலாம். தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில், 11 ஆயிரத்து, 741 காலி பணியிடத்துக்கு நடந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடற்தகுதி தேர்வு வரும், 26ல் தொடங்க உள்ளது. அதற்கு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட, 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம்: இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்போர், ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கலாம். தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில், 11 ஆயிரத்து, 741 காலி பணியிடத்துக்கு நடந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடற்தகுதி தேர்வு வரும், 26ல் தொடங்க உள்ளது. அதற்கு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட, 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தேர்வில் பங்கேற்போருக்கு, ஹால் டிக்கெட் வினியோகம் நேற்று ஆன்லைனில் தொடங்கியது. அதை பதிவிறக்கம் செய்துகொண்டால், அவர்கள் பங்கேற்க வேண்டிய நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தேர்வில், சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 480 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட, 3,913 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வை கண்காணிக்க, ஒவ்வொரு மையத்துக்கு ஐ.ஜி., தலைமையில், 12 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X