பொது செய்தி

தமிழ்நாடு

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை குறைப்பு; அரசு மருத்துவமனை நோயாளிகள் தவிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை குறைப்பால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை துறையின், அவசரமில்லா(எலக்டிவ் சர்ஜரி) அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்று மட்டும் உள்ளது. இதனால், தினமும் நான்குக்கும் குறைவான அறுவை சிகிச்சை மட்டும் நடக்கிறது. இரு அறுவை அரங்கம் இருந்தபோது, 6 முதல், 8 பேருக்கு அறுவை

சேலம்: அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை குறைப்பால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சேலம் அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை துறையின், அவசரமில்லா(எலக்டிவ் சர்ஜரி) அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்று மட்டும் உள்ளது. இதனால், தினமும் நான்குக்கும் குறைவான அறுவை சிகிச்சை மட்டும் நடக்கிறது. இரு அறுவை அரங்கம் இருந்தபோது, 6 முதல், 8 பேருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, துறை மருத்துவர்கள் கூறுகையில், 'விதிப்படி எலும்பு முறிவு சிகிச்சை துறைக்கு தனி கட்டட வசதி தேவை. அதற்காக, 2009 முதல் போராடியும் நடவடிக்கை இல்லை. ஆரம்பத்தில் இருந்த நான்கு அறுவை அரங்கம், பின், 2, தற்போது ஒன்றாகி விட்டது' என்றார். பொதுப்பணி அதிகாரிகள் கூறுகையில், 'எலும்புமுறிவு துறைக்கு, தனி கட்டடம் கட்ட, 54 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, மூன்றாண்டில் ஆறுமுறை தாக்கல் செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. புறநோயாளிகள் கட்டடத்துக்கு, 48 கோடி ரூபாய் மதிப்பில் அனுப்பிய திட்ட மதிப்பீடும் கிடப்பில் உள்ளது' என்றனர். டீன் வள்ளி கூறுகையில், ''அறுவை சிகிச்சை முறையாக தான் நடக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X