பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கை தாண்டி விற்றால் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: கைத்தறி அமைச்சர் தகவல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: ''கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் இலக்கை தாண்டி விற்றால், அதன் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறினார்.சேலத்தில், காதிகிராப்ட், கோ - ஆப்டெக்ஸ், பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று ஆய்வு செய்து, நெசவாளர்களுடன்

சேலம்: ''கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் இலக்கை தாண்டி விற்றால், அதன் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறினார்.


சேலத்தில், காதிகிராப்ட், கோ - ஆப்டெக்ஸ், பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று ஆய்வு செய்து, நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சேலம் கோ - ஆப்டெக்ஸில் ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் விற்பனை நடக்கிறது. அதை, 30 கோடி ரூபாயாக அதிகரிக்க, அந்நிறுவனத்தை வரும் தீபாவளிக்கு முன், 'மாடலிங்' செய்து, புது டிசைன்கள் உற்பத்தி மூலம், விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்கானிக் ஜவுளிகள் உற்பத்தி செய்து, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி, ஆன்லைன் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அடுத்து நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் உற்பத்திக்கு கூலி உயர்த்தி வழங்குவதோடு, 365 நாளும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், 200ல் இருந்து, 300 யூனிட்; விசைத்தறிக்கு, 750ல் இருந்து, 1,000 யூனிட் வழங்குவது குறித்து, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, 66 பயனாளிகளுக்கு, 41.60 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், 31.21 லட்சம் ரூபாய் மானியம் என, அறிவிக்கப்பட்டது. கைத்தறி, துணிநூல் ஆணையர் பீலா ராஜேஷ், கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X