சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமனார் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கருமந்துறை: பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையை சேர்ந்த, சின்னையன் மகன் காமராஜ், 28. கூலித்தொழிலாளியான இவருக்கு, 2020 ஜனவரியில், பெருஞ்சநாட்டான்வளவை சேர்ந்த கோபால் மகள் நந்தினி, 20, என்பவருடன் திருமணம் நடந்தது. நந்தினி உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று தங்கியுள்ளார். அப்போது, காமராஜ் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில், ஆக., 31ல், வீட்டில் தூக்கிட்டு

கருமந்துறை: பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையை சேர்ந்த, சின்னையன் மகன் காமராஜ், 28. கூலித்தொழிலாளியான இவருக்கு, 2020 ஜனவரியில், பெருஞ்சநாட்டான்வளவை சேர்ந்த கோபால் மகள் நந்தினி, 20, என்பவருடன் திருமணம் நடந்தது. நந்தினி உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று தங்கியுள்ளார். அப்போது, காமராஜ் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில், ஆக., 31ல், வீட்டில் தூக்கிட்டு நந்தினி தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தாய் பொட்டியம்மாள் புகார்படி, கருமந்துறை போலீசார் சந்தேக மரண வழக்குப்பதிந்தனர். அப்போதைய ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை விசாரித்ததில், தற்கொலைக்கு தூண்டியதால் நந்தினி இறந்தது தெரிந்தது. நேற்று, தற்கொலைக்கு தூண்டிய வழக்குப்பதிந்த போலீசார், காமராஜ், அவரது தந்தை சின்னையன், 60, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X