சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி வசூலித்த அக்கா, தம்பிக்கு காப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் கோதை, 53; ராமலிங்கபுரம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. இவரது கணவர் ராமச்சந்திரன் முதன்மை கல்வி அலுவலகத்தில், அரசு பள்ளி கட்டுமானப்பணியை ஆய்வு செய்யும் வேலை பார்க்கிறார். இவர்கள், 2014 ஆகஸ்டில், அம்மாபேட்டை, புதுத்தெருவை சேர்ந்த, சந்தோஷ் மனைவி விஷ்வபிரியா, 38, என்பவரிடம், 1.40 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கினர். கோதை, கடந்த ஜனவரி

சேலம்: சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் கோதை, 53; ராமலிங்கபுரம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. இவரது கணவர் ராமச்சந்திரன் முதன்மை கல்வி அலுவலகத்தில், அரசு பள்ளி கட்டுமானப்பணியை ஆய்வு செய்யும் வேலை பார்க்கிறார். இவர்கள், 2014 ஆகஸ்டில், அம்மாபேட்டை, புதுத்தெருவை சேர்ந்த, சந்தோஷ் மனைவி விஷ்வபிரியா, 38, என்பவரிடம், 1.40 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கினர். கோதை, கடந்த ஜனவரி வரை, 5.20 லட்சம் ரூபாயை வட்டியுடன் வழங்கி உள்ளார். ஆனால், கோதைக்கு சொந்தமான வீட்டை, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த லோகநாதனிடம், 25 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது போன்று, பத்திரத்தை காட்டி பணம் தரும்படி விஷ்வபிரியா, அவரது தம்பி கிருஷ்ணசாய், 34, ஆகியோர், கோதையை மிரட்டினர். கடந்த, 12ல், கோதை புகார்படி, அம்மாபேட்டை போலீசார், கடந்த, 18ல், விஷ்வபிரியா, கிருஷ்ணசாயை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X