மாஜி அமைச்சருக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சருக்கு வரவேற்பு

Added : ஜூலை 21, 2021
Share
அரூர்: முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., துணைப்பொதுச்செயலாளராக பதவி வகித்த பழனியப்பன் கடந்த, 3ல், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, மாவட்ட, ஒன்றிய, நகரம் மற்றும் கிளை கழகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.,வினரை பழனியப்பன் சந்தித்து வருகிறார். நேற்று அரூர் வந்த அவர்,

அரூர்: முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., துணைப்பொதுச்செயலாளராக பதவி வகித்த பழனியப்பன் கடந்த, 3ல், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, மாவட்ட, ஒன்றிய, நகரம் மற்றும் கிளை கழகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.,வினரை பழனியப்பன் சந்தித்து வருகிறார். நேற்று அரூர் வந்த அவர், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வேடம்மாள், நகர பொறுப்பாளர் மோகன், கீரை விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை சந்தித்தார். அப்போது, நிர்வாகிகள் பழனியப்பனுக்கு சால்வை அணிவித்ததுடன், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X