பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறி தடுப்பு அணை பாதிப்பு ஏற்படும்; மக்கள் புகார்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அரசு விதிமுறைகளை மீறி, முறைகேடாக தடுப்பணைகள் கட்டப்படுவதால், பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பாப்பிரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி பஞ்.,ல் பீனி ஆற்றின் குறுக்கே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 13.43 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட கடந்த, 2020 செப்., 18ல் அரசு உத்தரவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அரசு விதிமுறைகளை மீறி, முறைகேடாக தடுப்பணைகள் கட்டப்படுவதால், பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பாப்பிரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி பஞ்.,ல் பீனி ஆற்றின் குறுக்கே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 13.43 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட கடந்த, 2020 செப்., 18ல் அரசு உத்தரவு வழங்கியது. இப்பணி மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், காலதாமதமாக தடுப்பணை கட்டப்படும் பணி தொடங்கியது. மேலும், அரசு ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் கட்டுவதற்கு பதிலாக, 150 மீட்டர் தூரத்தக்கு முன்பாக கட்டப்படுகிறது. இதனால், மழைகாலங்களில் தண்ணீர் தேங்கும்போது அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என, அக்கிராம மக்கள், பி.டி.ஓ., மற்றும கலெக்டர் வரை புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்களை பாதிக்காத வகையில், அரசு விதிமுறைகளின் படி, ஏற்கனவே குறிப்பிட்ட இடத்திலேயே தடுப்பணையை கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X