பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி மீண்டும் துவக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் யூனியன் இராமியம்பட்டி பஞ்.,ல் உள்ள பூதநத்தம் சாலை முதல் மேக்கல்நாய்க்கனஹள்ளி வரை, 1.73 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஜன., 13ல் துவக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது குறித்து, கடந்த, 18ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கூடுதல்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் யூனியன் இராமியம்பட்டி பஞ்.,ல் உள்ள பூதநத்தம் சாலை முதல் மேக்கல்நாய்க்கனஹள்ளி வரை, 1.73 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஜன., 13ல் துவக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது குறித்து, கடந்த, 18ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் அளித்துள்ள விளக்கம்: கடத்தூர் ஒன்றியம் ராமியம்பட்டி பஞ்.,ல் பூதநத்தம் சாலை முதல் மேக்கல்நாய்க்கனஹள்ளி சாலை வரையுள்ள, 2.80 கி.மீ., நீளமுள்ள சாலை, 1.73 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், கடந்த ஜன., 13ல் பணி துவக்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது. இப்பணியின் ஒப்பந்த காலம் ஒன்பது மாதங்கள். இச்சாலையில் ஐந்து சிறுபாலங்கள், தேவையான தடுப்பு சுவர்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. சாலையையொட்டி நெடுகிலும் வனக்காப்புக்காடு உள்ளதால் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை நில அளவை செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இச்சாலைப்பணி, வரும் ஆக., 30க்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X