வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Added : ஜூலை 21, 2021
Share
பாலக்கோடு: பாலக்கோடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள தக்காளி தினசரி மார்க்கெட்டிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தக்காளியை கொண்டு வருகின்றனர். இதனால், மார்க்கெட்டிற்கு தினமும், 70 முதல், 100 டன் வரை தக்காளி விற்பனைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கால்,

பாலக்கோடு: பாலக்கோடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள தக்காளி தினசரி மார்க்கெட்டிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தக்காளியை கொண்டு வருகின்றனர். இதனால், மார்க்கெட்டிற்கு தினமும், 70 முதல், 100 டன் வரை தக்காளி விற்பனைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கால், மார்க்கெட்டிற்கு தக்காளியை கொண்டு வர முடியாத நிலை மற்றும் உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டங்களிலேயே விட்டனர். தற்போது தினமும், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு, 10 டன்னுக்கு குறைவான தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்ததால், வெளிமாவட்ட வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி, 160 ரூபாய் என விற்ற நிலையில், நேற்று, 210 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. தக்காளி கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X