ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

Added : ஜூலை 21, 2021
Share
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.,

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த இரு அணைகளில் இருந்து, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 15 ஆயிரத்து, 526 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 10 ஆயிரத்து, 853 கன அடியாக குறைக்கப் பட்டது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 17 ஆயிரம் கன அடியாகவும், மாலை, 5:00 மணிக்கு, 16 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது. காவிரியாற்றில் நீர்வரத்து, 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X