கணவருடன் குடும்ப தகராறு; இரு குழந்தைகளின் தாய் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் குடும்ப தகராறு; இரு குழந்தைகளின் தாய் மாயம்

Added : ஜூலை 21, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராசுவீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயேந்திரன், 35; இவரது மனைவி புவிதா, 30; இவர்களுக்கு திருச்செல்வன், 6, நிஷாந்த், 3 என்ற இரு மகன்கள். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த, 16ல் காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கணவரை புவிதா திட்டியதோடு, நாற்காலி, 'டிவி'யை உடைத்துள்ளார். அப்போது புவிதாவின் தாய் இந்துமதி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராசுவீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயேந்திரன், 35; இவரது மனைவி புவிதா, 30; இவர்களுக்கு திருச்செல்வன், 6, நிஷாந்த், 3 என்ற இரு மகன்கள். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த, 16ல் காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கணவரை புவிதா திட்டியதோடு, நாற்காலி, 'டிவி'யை உடைத்துள்ளார். அப்போது புவிதாவின் தாய் இந்துமதி, கே.திப்பனப்பள்ளியிலிருந்து மகளை பார்க்க கிருஷ்ணகிரி வந்துள்ளார். அவரிடம் விபரத்தை கூறிவிட்டு, குழந்தைகளை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு விஜயேந்திரன் வேலைக்கு சென்றார். அன்று மாலை, 6:30 மணிக்கு, கே.திப்பனப்பள்ளியில் தாய் வீட்டிலிருந்த புவிதா, வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விஜயேந்திரன் கடந்த, 19ல் அளித்த புகாரின்படி குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X