சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த ஏழு பேர் போலீசில் சிக்கினர்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் பகுதியில், நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த, ஏழு பேரையும், பாலீஸ் தோட்டாக்கள், மருந்துகள் விற்றவரையும் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார், மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வனவிலங்குகளை

ஓசூர்: கெலமங்கலம் பகுதியில், நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த, ஏழு பேரையும், பாலீஸ் தோட்டாக்கள், மருந்துகள் விற்றவரையும் போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார், மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த, காடுலக்கசந்திரத்தை சேர்ந்த மாரப்பா, 45, லட்சுமிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன், 47, பேவநத்தத்தை சேர்ந்த திம்மராயன், 42, இருளபட்டியை சேர்ந்த நாகராஜ், 37, உப்புபள்ளத்தை சேர்ந்த முரளி, 25, சங்கரப்பா, 60, மற்றும் யூபுரத்தை சேர்ந்த திம்மராயப்பா, 50, ஆகிய, ஏழு பேரை நேற்று கைது செய்தனர். அத்துடன், துப்பாக்கிகளுக்கு பாலீஸ் தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை சப்ளை செய்த, பூஜை பொருட்கள் கடை நடத்தி வரும், கெலமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன், 45, என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து, ஏழு நாட்டுத்துப்பாக்கிகள், பாலீஸ் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X