சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி பஞ்., தலைவர் கணவர் மீது தாக்குதல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன் நகரில், பொதுவழிப்பாதை பிரச்னையில், மாஜி பஞ்., தலைவரின் கணவரான சுப்பிரமணி, 49, என்பவரின் மண்டை உடைக்கப்பட்டது. இது குறித்து, பொதுமக்களுடன் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: குருபரபள்ளி அம்மன் நகரிலுள்ள, 12 அடி அகல பொது வழிப்பாதையில் பொதுமக்கள் நீண்ட காலமாக சென்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன் நகரில், பொதுவழிப்பாதை பிரச்னையில், மாஜி பஞ்., தலைவரின் கணவரான சுப்பிரமணி, 49, என்பவரின் மண்டை உடைக்கப்பட்டது. இது குறித்து, பொதுமக்களுடன் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: குருபரபள்ளி அம்மன் நகரிலுள்ள, 12 அடி அகல பொது வழிப்பாதையில் பொதுமக்கள் நீண்ட காலமாக சென்று வருகின்றனர். ஆனால் கோவிந்தராஜ் என்பவர் அந்த இடத்தில், ஏழு அடியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார். இது குறித்து கடந்த, 18ல் நான் பொதுமக்களுடன் சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டத்தில், என் மண்டையை உடைத்து விட்டனர். இது குறித்து, குருபரப்பள்ளி போலீசில் புகார் தெரிவித்தேன். போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X